தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்


இறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் விளம்பி வருஷம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் நம்முடைய வாழ்வில் மாற்றம் ஏற்றமும் வருவதற்கும் - இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் - நல்ல மழை பொழியவும் - அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் - விவசாயம் செழிக்கவும் நாம் இறைவனை வணங்குவோம்.

இந்த தமிழ் புத்தாண்டு சனியின் நக்ஷத்ரமான உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயணம் வஸந்தரிது சித்திரை மாதம் 01ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை கிருஷ்ண திரயோதசியும் - உத்திரட்டாதி நக்ஷத்ரமும் - மாஹேந்திர நாமயோகமும் - வணிஜை கரணமும் - மீன ராசியில் - சிம்ம நவாம்ச சந்திர அம்சத்தில் - மேஷ லக்னத்தில் - சிம்ம நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 2.18க்கு - காலை 7.02க்கு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு சனி திசை 16 வருஷம் 6 மாதம் 8 நாட்கள்.

புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டு சர நெருப்பு லக்னமான மேஷ லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீடான குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார்.

மீன ராசி உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்திலேயே உச்சமாக இருப்பதும் - பாக்கியாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.

விளம்பி வருஷ வெண்பா:

விளம்பி வருடம் விளைவு கொஞ்ச மாரி அளந்து பொழியும் அரசர் களங்கமுடன் நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை ஆவா புகலவரி தாம்.

விளம்பி வருஷ நவநாயகர்களும், பலன்களும்:

ராஜா - சூரியன் பலன் - குதிரைகளுக்கதிபதி

மந்திரி - சனி பலன் - யானைகளுக்கதிபதி

அர்காதிபதி - சுக்கிரன் பலன் - பக்ஷிக்களுக்கதிபதி

ஸஸ்யாதிபதி - செவ்வாய் பலன் - பிரஜைகளுக்கதிபதி

ஸேனாதிபதி - சுக்கிரன் பலன் - பசுக்களுக்கதிபதி

ரஸாதிபதி - குரு பலன் - ஸர்ப்பங்களுக்கதிபதி

தான்யாதிபதி - சூரியன் பலன் - ஒட்டங்களுக்கதிபதி

மேகாதிபதி - சுக்கிரன் பலன் - விருக்ஷங்களுக்கதிபதி

நீரஸாதிபதி - சந்திரன் பலன் - கிரஹங்களுக்கதிபதி

வருடம் பிறக்கும் போது கிரகங்களுடைய பாதசாரங்கள்

லக்னம் - பரணி 1ல் - சுக்கிரன் சாரம் சூரியன் - அஸ்வினி 1ல் - கேது சாரம் சந்திரன் - உத்திரட்டாதி 1ல் - சனி சாரம் செவ்வாய் - பூராடம் 3ல் - சுக்கிர சாரம் புதன் - உத்திரட்டாதி 1ல் - சனி சாரம் குரு - விசாகம் 3ல் - சுய சாரம் சுக்கிரன் - பரணி 3ல் - சுய சாரம் சனி - மூலம் 3ல் - கேது சாரம் ராகு - பூசம் 4ல் - சனி சாரம் கேது - திருவோணம் - 2ல் - சந்திரன் சாரம்

கிரக மாற்றங்கள்:

விளம்பி வருஷம் புரட்டாசி மாதம் - 18ம் தேதி - 04.10.2018 - வியாழக்கிழமை - இரவு 10.05க்கு குரு பகவான் - துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு ராகு பகவான் - கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். விளம்பி வருஷம் மாசி மாதம் - 01ம் தேதி - 13.02.2019 - புதன்கிழமை - பகல் 02.02க்கு கேது பகவான் - மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

ஜோதிடர்

பெருங்குளம் ராமகிருஷ்ணன்



Leave a Comment