பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்


பழநி, பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.பங்குனி உத்திர விழா திரு ஆவினன்குடி கோயிலில் மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் உலா வந்தார்.வடக்கு கிரிவீதியில் திருத்தேரில் ஏற்றம் செய்தனர். மாலை 4:50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்குகிரி வீதிகளில் தேர்வலம் வந்த போது நவதானியம், பழங்கள், நாணயங்களை தேரின் மீது பக்தர்கள் வீசினர்.மாலை 6:25 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று (மார்ச் 31) இரவு 10:00 மணிக்கு மேல் தங்கக் குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி உலா வருவார். ஏப்.,2ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைபெறும்.--மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பால்குடங்கள், தீர்த்த காவடிகளுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் செவ்வந்தி, செண்டுமல்லி, ரோஜா, தாமரை, வாழை, இளநீர் கொண்ட தோரணங்கள், உட்பிரகாரத்தில் நிலைமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பழநி புஷ்பகைங்கர்ய சபா சார்பில், திருஆவினன்குடி கோயிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்திருந்தனர்.



Leave a Comment