ஸ்ரீபாலையத்தம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்...


திருபருத்திக்குன்றம் கிராமத்தில் கிராமதேவதை ஸ்ரீபாலையத்தம்மன் கோவில் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் தெளித்து கொண்டனர்

காஞ்சிபுரம் அடுத்த திருபருத்திக்குன்றம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபாலையத்தம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருபருத்திக்குன்றம் கிராமத்தில் உள்ள கிராம பொதுமக்கள் கிராம தேவதையான பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த பாலையத்தம்மனை திருக்கோயில் புதுப்பித்து  திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு நான்கு வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜைகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கியது .

இதனை தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று இன்று காலையில் மகாபூர்ணாபதி தீபாரதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கொண்டு ராஜ கோபுரத்திற்கு சென்றதும் மகா சம்ப்ரோஷ்ணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவில் கோயில் கிராம பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டு குழுக்கள் உட்பட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு புனித நீரை தெளித்து சென்றனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.



Leave a Comment