தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோ பூஜையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் முதலில் வெள்ளீஸ்வரர் மூன்று சுற்றுகளும் அதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் ஏழு சுற்றுகளும் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

 

பின்னர் இரவு காமாட்சி அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. தெப்பத்தில் சென்றுவர குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் தெப்ப திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவில் ஜப்பம் அருகே குவிந்து இருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாங்காடு போலீசாரம் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று தொடங்கிய தெப்ப திருவிழாவானது வரும் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் கவெனிதா மற்றும் பரம்பரை தர்மகர்த்தா மணலி. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.



Leave a Comment