ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் ஐய்யப்ப சுவாமி தொட்டில் ஆராதனை


ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத ஐய்யப்ப சுவாமி உற்சவர் மூர்த்தி வீதியுலா காட்சிகள் மற்றும் தொட்டில் ஆராதனை நிகழ்வுகள் மிக விமர்சியாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் மண்டல பூஜைகள் நடைபெறுவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.

அதேபோல் மார்கழி  1-ம் தேதி  இக்கோயிலில் கொடியேற்ற நிகழ்வு மிகவும் விமர்சியாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இக்கோயிலில் உற்சவர் மூர்த்தி வீதி உலா காட்சிகளும் தொட்டிலில் சுவாமியை வைத்து சிறப்பு ஆராதனை நிகழ்வுகளும் கூட்டு அபிஷேக பூஜைகளும் வழிபாட்டு பிரார்த்தனைகளும் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இக்கோயிலில் அமைந்துள்ள 18 படிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment