பழனி முருகன் கோயிலில் காப்பு கட்டுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா...


பழனி முருகன் மலைக்கோவிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டுடன் துவங்கியது..

 பழனி முருகன் மலைக்கோவில் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானதாகும். இன்று மதியம் 12 மணிக்கு காப்பு கட்டுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது.. மூலவர் முருகப்பெருமானுக்கும், வேலும், மயிலும், துவார பாலகர்கள், விநாயகர், சண்முகர் வள்ளி தெய்வானை, ஆகியோருக்கு மஞ்சள் நிற கயிறு காப்பக கட்டப்பட்டது.

பின்பு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.. இதில் ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் தங்கள் கைகளில் மஞ்சள் நிற கயிறை, காப்பு கட்டாக கட்டிக்கொண்டு, கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பித்தனர்..

 இத்திருவிழாவில் முக்கிய நாள் நிகழ்ச்சியாக, வரும் நவம்பர் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனால் அன்று மதியம் 1:30 சாய்ரஜ பூஜை நடைபெறுகிறது. 2.45 மணிக்கு சூரர்களை வதம் செய்ய, முருகப்பெருமான் மலைகொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு கோவில் நடை சாத்தப்படுகிறது.

பின்பு 6 மணி அளவில் சூரசம்ஹாரம் தொடங்குகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் சூரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு, வெற்றி விழா நடைபெறுகிறது.  நவம்பர் 19ஆம் தேதி, பழனி முருகன் மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு மேல், முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.  இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.



Leave a Comment