தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தந்த அம்மன்...


நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான இன்று தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை கண்டு களித்தனர்.

நவராத்திரி முன்னிட்டு அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்து சிவ பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சிறப்புக் காட்சி தந்தார்.

பின்னர் சிவ பூஜையில் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனுக்கு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நவராத்திரி திருவிழாவின் முதல் நாளான அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை கண்டு களித்தனர்.

முன்னதாக ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு பல அடுக்குகளில் விநாயகர் கிருஷ்ணர் பெருமாள் சிவன் வடிவில் என ஏராளமான கொழு அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.



Leave a Comment