அரசமரமாக காட்சிதரும் சிவனுக்கும் வேப்பமர வேப்பிலைகாரி தேவிக்கும் திருக்கல்யாணம்...


தேனி அருகே மலை மேல் அமைந்திருக்கும் சிவன் திருக்கோயிலில் அரசமரமாக காட்சிதரும் சிவனுக்கும் வேப்பமர வேப்பிலைகாரி தேவிக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் மலை மேல் பழமைவாய்ந்த சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தத் திருக்கோயிலில் சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக புனித கலச குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு நெய் வஸ்திரம் உள்ளிட்டவற்றை கொண்டு பூர்ணஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.

கோயிலில் எழுந்தருளிருக்கும் அரசமரத்தை சிவனாகவும் வேப்பமரத்தை பார்வதி ஆகவும் பாவித்து அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிவன் பார்வதிக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் திருக்கல்யாண சேவை சிறப்பாக நடைபெற்றது பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் சிவலிங்கத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவன் பார்வதிக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

 



Leave a Comment