திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை....


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான ஆவணிதிருவிழா  கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான குடவருவாயில் தீபாராதனை இன்று மேலக் கோவிலில் வைத்து நடைபெற்றது.

இதனையொட்டி முன்னதாக  குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. குடவருவாயில் தீபாராதனையொட்டி  சுவாமி அம்பாள் தனித்தனியே தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் பிரதான கதவு சாத்தப்பட்டது. அதேநேரத்தில் எதிர்புரம் சுவாமி ஜெயந்திநாதர்  கீழ ரதவீதி முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்ததும், எதிர் சேவைக்காக கதவு திறக்கப்பட்டது.

பின்னர்  தொடர்ந்து  சுவாமிகும் அம்பாளுக்கும் ஜெயந்திநாதருக்கு ஒரே நேரத்தில்  தீபாராதனை  நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர். தொடார்ந்து சுவாமி மற்றும்  அம்பாள் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி  சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில்  உலா வந்தனர்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 13-ம் தேதி நடைபெறுகிறது..



Leave a Comment