அடைக்கலம் காத்த அய்யனார் குருந்தாடி காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆக்கவயல் ஸ்ரீ பூர்ணா தேவி புஷ்கலாதேவி சமேத அடைக்கலம் காத்த அய்யனார் குருந்தாடி காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 30 ம் தேதி புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து கணபதி பூஜை வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது.  31 ஆம் தேதி முதல் காலயாக பூஜைகள் தொடங்கி தொடர்ந்து ஐந்து கால பூஜைகள் முடித்து இன்று காலை ஆறாம் கால பூஜை நிறைவடைந்து, யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்ட கடத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் விமான கலசங்களில் மணிகண்டன் உள்ளிட்ட சிவாச்சாரிகள் ஆறு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கலசங்களுக்குமகா தீபாரதனை  காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவை ஆக்கவயல், சூராணம், சாலை கிராம், இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment