உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்க..... ஆடி பௌர்ணமி வழிபாடு....


தமிழ் மாதம் சூரியனை அடிப்படையாக கொண்டது. சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்ககூடிய காலத்தை ஒவ்வொரு தமிழ் மாதமாக பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் இறைத்துவம் பொருந்திய மாதந்தகளில் ஒன்று. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தான் ஆடி பெருக்கு என்ற தினத்தை வைத்து விவசாய தொழிலை தொடங்கினர்.

அதோடு இந்த மாதத்தில் முழு மனதும், உடலும் உழைக்க வேண்டும் என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கூட நடத்தப்படுவதில்லை. அதோடு புதுமண தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கிராமங்களில் ஆடி மாதத்தில் காப்பு கட்டி திருவிழா வைப்பதும், மஞ்ச தண்ணீர், கூல் என நோய் எதிர்ப்பு சக்தியை தரும் விஷயங்களைப் பின்பற்றி வந்தனர். ஆடி, அமாவாசை, ஆடி பூரம், ஆடி பெருக்கு என பல விசேஷங்கள் நிறைந்த இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடி பெளர்ணமியும் மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதுவும் இந்தாண்டு ஆடி மாத பௌர்ணமியில், ஆவணி மாத பெளர்ணமி தினத்தில் கடைப்பிடிக்கக்கூடிய ஆவணி அவிட்டம் எனும், பூனுல் மாற்றிக் கொள்ளக்கூடிய அற்புத நாள் பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினம் பொதுவாக உத்திராட நட்சத்திரம் வரும். இந்த ஆடி பெளர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள். ஆடி பெளர்ணமி தினத்தில் உத்திரம், திருவோண நட்சத்திரம் இணைந்திருப்பதால் திருமாலுக்கு விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். புண்ணியம் கிடைக்கும். அதோடு உத்தியோகஸ்தர்கள் நினைத்த பதவி கிடைக்கக்கூடும்.

 



Leave a Comment