காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்...


உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதையொட்டி இன்று அதிகாலை கோவிலின் மூலவர் பகுதியில் இருந்து உற்சவர் ஆன வரதராஜ பெருமாள்  ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையிலிருந்து இறங்கி வந்து கொடி மரத்தின் அருகே பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதன்பின் கண்ணாடி அறையில் இருந்து கருட உருவம் பொறித்த கொடி பல்லக்கில் கொண்டுவரப்பட்டு பின் பட்டாட்சியர்கள் கொடி மரத்திற்கு பூஜை செய்து பின்பு கருட உருவம் பொறித்த கொடியை கொடி மரத்தில் ஏற்றி வைத்திட வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அலங்காரம் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை,மாலை, என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில்  காஞ்சிபுரம் மாநகரின் வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

பிரம்மோற்சவத்தில் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம்  ஜீன் 2ம் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் 6-ம் தேதியும் நடைபெற்று ஜூன் மாதம் 8ஆம் தேதி தீர்த்த வாரியும் 30ஆம் தேதி வெட்டிவேர் சப்பர உற்சவம் நிறைவு பெறுகிறது.



Leave a Comment