தீபாவளியின் நலன்களை தெரிந்து கொள்ளுங்கள்!


 

தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகளு‌க்கு கொ‌ண்டா‌ட்ட‌ம் தா‌ன். ப‌ட்டாசு வெடி‌த்து ஆன‌ந்த கு‌த்தாடு‌ம் அவ‌ர்க‌‌ளி‌ன் ம‌கி‌ழ்‌‌ச்‌‌சி‌க்கு எ‌ல்லையே ‌கிடையாது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ப‌ட்டாசு வெடி‌த்து ம‌கி‌ழ்வா‌ர்க‌ள்.

அனை‌த்து மத‌‌த்‌தினரையு‌ம் ஈ‌ர்‌‌க்கு‌ம் ஒரே ப‌ண்டிகை ‌தீபாவ‌ளி. ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவர்கள்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும் . அந்த நீராடலைத்தான் ” கங்கா ஸ்நானம் ஆச்சா ” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் . அன்றைய தினம் , எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர்நிலைகளும் ” கங்கா தேவி ” வியாபித்து இருப்பதாக ஐதீகம் . அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் , சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

நரகாசுரனின் நினைவு நாளாக மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். எமனுக்கு யமுனை என்ற தங்கை இருந்தாள். எமன் தன் தங்கைக்கு தீபாவளியன்று பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன் அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாகவே உறவினர்களுக்கு பரிசுகள் மற்றும் விருந்துகள் அளிக்குறோம்..

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் . அன்று அநேக பெண்கள் புடவையும் ( குறிப்பாக பட்டுப்புடவை ) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் . பரிசுகள் தந்து மகிழ்வர் .உறவினர் வீடுகளுக்கு சென்று  சந்தோஷப்படுத்துவார்கள். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர் . தீபாவளி இலேகியம் ( செரிமானத்திற்கு உகந்தது ) அருந்துவதும் மரபு.

இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா!  என்று ஆண்டு முழுவதும் அந்த ஒரு நாளுக்காக மக்கள் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.



Leave a Comment