முதலில் காண வேண்டியது...இறைவனின் திருவடியை!


எந்த கோயிலுக்குச் சென்றாலும், கடவுளின் எந்த மூர்த்தங்களைப் பார்த்தாலும், அத்தெய்வ வடிவத்தின் முகத்தைப் பார்க்ககூடாது. திருவடிகளைக் கண்டுதான் வணங்க வேண்டும். ' திருவடி' என்பது பாதங்கள் பொற்பாதங்கள், கமல பாதங்கள் என்று பொருள்படும். திருவடி நகர்ந்தால்தான் பரமனின் திருவுருவம் நகரும். இப்படிப்பட்ட திருவடிகளாக விளங்குபவரே குருநாதர்.

முப்பது முக்கோடி தேவர்களாலும் கொடுக்க முடியாத பேரருளைக் கொடுக்க வல்லது குருநாதரின் திருவடி. குருவாய் உருவாய் உளதாய் இலதாய் அல்லதுமாய் எல்லாமாய் இருக்கக்கூடிய பரம்பொருளின் திருவருளைப் பெறுவதற்கும், அது மேலும் பெருகுவதற்கு அவனுடைய திருவடிகளை சரணம் அடைவதைவிட வேறு மார்க்கம் கிடையாது.



Leave a Comment