சுவாமிமலை முருகனின் வைரவேல் தரிசனம்


முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை தருத்தலம் கும்பகோணத்திற்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது,இத்திருத்தலத்தில் முக்கிய நிகழ்வான இன்று முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தின் வரலறானாது ஒரு முறை முருகப்பெருமான் பிரணவ பொருளின் விளக்கத்தை பிரம்மனிடம் கேட்க அவர் பதில் கூற இயலாமல் திகைத்தார். எனவே, முருகப்பெருமான் பிரம்மனை சிறையில் அடைத்து தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியை கேட்டறிந்த சிவப்பெருமான் முருகனிடம் சென்று பிரம்மனை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பிரம்மனை விடுவித்த முருகனை சிவப்பெருமான் அழைத்து அந்த பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு உபேதேசிக்குமாறு கேட்டுக்கொண்டார், பின் முருகன் சிவபெருமான் மடியில் அமர்ந்து அவர் காதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை அளிக்கிறார். தகப்பனுக்கே உபதேசம்  செய்த காரணத்தினால் முருகன் இங்கே தகப்பன்சாமியாகிறார். இந்த தகப்பன்சாமி வாழ்கின்ற காரணத்தினால் இம்மலைக்கு சுவாமிமலை என்று பெயர் வந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

இத்திருத்தலத்தின்  கருவறையில் முருகப்பெருமான் ஆறடி உயரத்தில் வலக்கரத்தில் தந்தம் பற்றியும். இடக்கரத்தை தொடைமீது அமர்த்தியும் கருணைப் பொழியும் திருமுகத்துடன் குருவாய் காட்சியளிக்கிறார். மேலும் இத்தருத்தலம் தமிழ் வருடங்கள் அறுபதை குறிக்கும் வகையில் அறுபது படிகள் கொண்டு அமைந்துள்ளது. கல்வியும் ஞானத்தையும் வேண்டும் பக்தர்களுக்கு சுவாமிமலை முருகப்பெருமான் அருளை வாரி வழங்குகிறார். அத்துணை சிற்ப்புமிக்க இத்திருத்தலத்தில் முக்கிய நிகழ்வான இன்று முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முருகப்பெருமானின் இத்தரிசனத்தை காண எண்ணிலடங்கா பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

 



Leave a Comment