திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு சிறப்பு பேருந்துகள்....


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இந்த நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
பிரம்மோற்சவத்தின் சாதாரண நாட்களில் நாள்தோறும் 2,000 முறை திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 135 ஆந்திரா பஸ்கள், 135 தமிழக பஸ்கள் என மொத்தம் 270 பஸ்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் திருப்பதிக்கு இயக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



Leave a Comment