வளர்பிறை நாட்களில் என்னென்ன செயல்களை செய்யலாம்?


சுக்ல பட்சம் என்றால் வளர்பிறை காலம். அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியிலிருந்து பௌர்ணமி நாள் வரை வருகின்ற 15 நாட்களை சுக்ல பட்சம் அதாவது வளர்பிறை காலம் என்று அழைக்கிறோம்.

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும்.

வளர்பிறையை திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள். வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள்.

கிரகப்பிரவேசம் செய்யும் போதும் வளர்பிறையை பார்ப்பது ஏனென்றால், குடிபுகும் வீட்டில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். குழந்தைகளை கல்விக்கூடத்தில் சேர்ப்பது, வியாபாரம் தொடங்குவது, வீடுகட்ட தொடங்குவது போன்ற முக்கியமான செயல்களுக்கு வளர்பிறைதான் முக்கியம்.

வளர்பிறை திரியோதசியில் பிரதோஷ வழிபாட்டிற்கு பூஜை சாமான்கள் வாங்கி கொடுப்பது, பிரதோஷ வேளை முழுவதும் கர்ப்ப கிரகம் அருகில் அமர்ந்தபடி சிவ தியானம் செய்து வருவது பாவங்களை போக்கும். சண்டை சச்சரவுகளில் இருந்து இந்நாளில் ஒதுங்கி இருப்பது நலம் தரும்.

 



Leave a Comment