நான்காவது கவசம் – திருப்பரங்குன்றம் கவசம்


திருப்ரங்குன்றுறை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையாபுரியில் மகிழ்ந்துவாழ் பவனே

ஓய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
ப‌ழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடைய முதல்வன் முதலாய் நமோ நமோ

விராலிமலை யுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத் தோன் மருகா நமோ நமோ
சூரகம் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேலனே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ

கண்கள் ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடைக்கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சச்ச‍ ச்ச‍ச ஓம்ரீம்
ரரர‍ ரர‍ர ரீம் ரீம்

வவவ‍ வவ‍வ ஆம் ஹோம்
ணணண‍ ணண‍ண வாம் ஹோம்
பபப‍ பப‍ப சாம் சூம்
வவவ‍ வவவ‍ களம் ஓம்
வவ லீலீ லுலு நாட்டிய அட்சரம்

கக கக‍ கக‍ கந்தனே வருக‌
இக இக இக ஈசனே வருக‌

அடுத்து...ஐந்தாவது கவசம்- திருத்தணி(கை) கவசம்

- வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்



Leave a Comment