தை அமாவாசை... தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்


தங்களுடைய முன்னோர் இறந்த தேதி தெரியாத நபர்கள் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்திற்கு நன்மை பயக்கும். தங்களுடைய முன்னோர் வாழும் காலத்தில் அவர்களை பராமரிக்காமல் துன்பத்தில் வாட விட்டவர்களுக்கு பாவம் சேர்வதாக நம்பப்படுகிறது.

முன்னோரின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மிகப்பெரிய பாவம். அதற்கு பாவ பரிகாரமாக தை அமாவாசையில் முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பது நல்லது. தை அமாவாசை அன்று காலையிலேயே ஆறு, கடல் ஆகிய நகரும் நீர் நிலைகளுக்கு போய் தலை மூழ்கி நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

தை அமாவாசை நாளில் காலை 6.17 மணி முதல் நள்ளிரவு 2.22 மணி (ஜனவரி 22ஆம் தேதி) வரை தர்ப்பணம் அளிக்க ஏற்ற நேரம். தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால் வேதனையில் அல்லப்பட்ட முன்னோரின் ஆன்மா சாந்தியடையும் என நம்பப்படுகிறது. ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்கள் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் கிடையாது. மதிய நேரம் தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.

 



Leave a Comment