சனிக்கிழமையில் வரும் தை அமாவாசை... முன்னோர்கள் ஆசி கிடைக்க....


ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றது. தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான, தை மாதத்தில் பிறக்கும் அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். பெரும்பாலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தை அமாவாசை தினத்தில் எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து அவர்களின் வயிற்றை நிறைத்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

தை அமாவாசை தினத்தில் நீர் நிலைகளான கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவது வழக்கம். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விடலாம்.

 



Leave a Comment