பெருமாளின் ஆர்த்தியை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா?


பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு காட்டப்படும் ஆர்த்தியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாமா?

கூடாது......

பெருமாள் கோவிலை பொருத்தமட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் ( ஆர்த்தியை ) தீபாராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை , கர்பக்கிரகத்திலேயே ஆராதகர் வைத்து விடுவார்கள். அது தான் சரியான முறையாகும்.

ஆனால் தற்போது சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வருகிறார்கள். ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வந்தாலும் , நாம் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வது கூடாது. அது தவறாகும்.

பெருமாள் கோவிலை பொருத்த மட்டில், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டும் தான் முக்கியம். பெருமாள் கோவிலை பொருத்த மட்டில் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக ஆராதகரின் தட்டு , தீபம் , எதையும் பக்தர்கள் தொடுவது கூடாது.

சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், என்கிறார்கள். இவ்வளவும் சொல்வதற்கு முக்கிய காரணம்,....எந்த கோவிலுக்கு செல்கிறோமோ, அந்த கோவிலின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும்.

எனவே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ....... பெருமாள் கோவில் முறைக்கும், சிவன் கோவில் முறைக்கும், வித்தியாசங்கள் நிறைய உள்ளன. அவைகளை நன்கு தெரிந்து கொண்டு, அந்தந்த முறைகளை, அந்தந்த கோவில்களில், சரியாக பயன்படுத்த வேண்டும். முறைகளை மாற்றம் செய்தீர்கள் என்றால் ,அந்த கோவிலின் பலன் உங்களுக்கு கிடைக்காது. என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

 

 



Leave a Comment