அருள்மிகு ஸ்ரீ மணிமுத்து மாரியம்மன்  திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்


நாகை அருகே பெருங்கடம்பனூர் அருள்மிகு ஸ்ரீ மணிமுத்து மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. பக்தர்கள் ஆண்கள், பெண்கள் சாமி வந்து ஆடி பக்தி பரவசமாக சாமி தரிசனம்.


நாகப்பட்டினம் மாவட்டம், பெருங்கடம்பனூரில் பழமை வாய்ந்த அருள்மிகு மணிமுத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கடந்த 8 ம் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் துவங்கிய நிகழ்ச்சியில் தொடர்ந்து வாஸ்து சாந்தி லஷ்மி ஹோமம், ரக்ஷபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் மகா பூர்ணாஹுதி நடைப்பெற்று சிறப்பு தீபாரதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைப்பெற்றது.

மங்கல வாத்தியம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மூலஸ்தான  கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ  மணிமுத்து மாரியம்மன்மற்றும் பெரியாச்சி, காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது.

இதில் பெருங்கடம்பனூர், இளங்கடம்பனூர்  உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று ஆண்கள், பெண்கள் சாமியாடி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment