திருப்பதி ஏழுமலையான் கோயில் பவித்ர உற்சவம் துவக்கம்...


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் பவித்ர உற்சவம் என்ற பெயரில் தோஷ நிவாரண பூஜை நடத்துவது வழக்கம். கோவில்களில் குடி கொண்டிருக்கும் இறை மூர்த்திகளுக்கு தேவாதி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோராலும் சிறு சிறு அளவிலான குற்றம், குறைகள் இல்லாமல் பூஜைகள், உற்சவங்கள்,கைங்கரியங்கள், சமர்ப்பணங்கள் ஆகியவற்றை நடத்த இயலுமா என்பது சந்தேகமே ஆகும்.

 இந்த நிலையில் சாதாரண மனிதர்களாகிய நாம் இறைவனுக்கு அத்தகைய குற்றம் குறைகள் இல்லாமல் கைங்கரிய சேவைகளை செய்ய இயலாது என்பது உண்மை.

கோவில்களில் நடைபெறும் பூஜைகள்,உற்சவங்கள், சமர்ப்பணங்கள் ஆகியவற்றின் போது தெரிந்தோ தெரியாமலோ நிகழ்ந்துவிடும் குற்றம் குறைகளை அப்படியே விட்டு விட்டால் அது தோஷமாக மாறி அந்த குறிப்பிட்ட கோவிலில் குடி கொண்டிருக்கும் இறை சக்தி பாதிப்பிற்கு உள்ளாகும்.

 இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் என்ற பெயரில் ஏழுமலையான் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் மூன்று நாட்கள் சிறப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஏழுமலையான் கோவிலில் இன்று இந்த ஆண்டிற்க்கான பவித்ர உற்சவம் இன்று துவங்கியது.



Leave a Comment