வரலட்சுமி விரத பூஜைக்கு முன் முதலில் செய்ய வேண்டிய விக்னேஸ்வர பூஜை 


உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, 

ஓம் கேசவாய ஸ்வாஹா 
ஓம் நாராயணாய ‌ ஸ்வாஹா
ஓம் மாதவாய ஸ்வாஹா  

என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். மீதியை புஸ்தகம் பார்த்து ஆசமனம் செய்ய வேண்டும். கையில் மஞ்சள் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும். 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்| 
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே|| 

மமோ பாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ லஷ்மி நாராயணப் ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே... 
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். 

விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசமனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும். 

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ 

விக்னேஸ்வரம் த்யாயாமி  

ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி

என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும். இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ 

மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும். 

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி| 
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்) 
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்) 
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 
” உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்) 
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்) 
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்) 
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்) 
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும். 

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம| 
ஓம் கபிலாய நம 
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் விநாயகாய நம 
ஓம் தூமகேதவே நம  
ஓம் கணாத்யக்ஷாய நம
ஓம் பாலசந்த்ராய நம  
ஓம் கஜானனாய நம  
ஓம் வக்ரதுண்டாய நம 
ஓம் சூர்ப்பகர்ணாய நம 
ஓம் ஹேரம்பாய நம 
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் ஸித்திவிநாயகாய நம
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம
 
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி 
ஓம் ப்ராணாய ஸ்வாஹா 
ஓம் அபாநாய ஸ்வாஹா  
ஓம் வ்யாநாய ஸ்வாஹா  
ஓம் உதாநாய ஸ்வாஹா  
ஓம் ஸமாநாய ஸ்வாஹா 
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா  
மஹாகணபதயே நம: 
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி | 
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்.
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும். 
 



Leave a Comment