செல்வங்களை அள்ளித்தரும் வர லஷ்மி விரதம் 


காக்கும் கடவுள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அள்ளி தரக்கூடிய மஹாலஷ்மி தேவியை வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த வர லஷ்மி விரதம் விரதத்திற்கான நோக்கம்.

வர லஷ்மி விரத முறை 

வர லஷ்மி விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் முதல் நாளே வீட்டையும், பூஜை அறையையும் அழகாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து முடித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு முதலில் விநாயகரை வணங்கி பின்னர் குல தெய்வத்தையும் வணங்கி பின் இவ் விரதத்தை தொடங்க வேண்டும்.

குரு ஹோரை சுக்ர ஹோரையில் பூஜை செய்யலாம்.

வரலஷ்மி விரதத்தின் முக்கியத்துவம்:

இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் சகல செளபாக்யமும் பெற்று வாழ வேண்டும் என்பதே.

தொழில் சிறக்க வேண்டும். அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய லஷ்மி தேவியை நினைத்து கடைபிடிக்கக்கூடிய விரதமாகும்.

கன்னி பெண்கள்

சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.  ஒரு பெண்ணுக்கு முழுமையான அந்தஸ்தை பெறுவது அவள் திருமண உறவில் ஈடுபடும் போது தான். அவளுக்கு எல்லாமுமாக இருக்கக்கூடியவன் கணவன். அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லஷ்மியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.
விரதத்தால் கிடைக்கும் அஷ்ட லட்சுமிகளின் அருள் வர லஷ்மியை வணங்குவதன் மூலம் ஒருவர் அஷ்ட லஷ்மியின் ஆசீர்வாதத்தை பெறலாம். ஆதி அல்லது மஹா லஷ்மி (ஆன்மீகக் கற்றளைத் தூண்டுபவர் அல்லது பாதுகாப்பவர்)

தன லஷ்மி (செல்வத்தின் தெய்வம்)
தைர்ய லஷ்மி (தைரியத்தின் தெய்வம்)
செள பாக்ய லஷ்மி (நல்ல அதிர்ஷ்டத்தின் தெய்வம்)
விஜய லஷ்மி (வெற்றியின் தெய்வம்)
தான்ய லஷ்மி (தானியங்களை அருள்பவர்)
சந்தனா லஷ்மி (குழந்தைப் பேறு அருள்பவர்)
வித்யா லஷ்மி (ஞானத்தின் தெய்வம்)


இவ்வாறு, இந்த நாளில் ஒரு வரலஷ்மி விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், பெண்கள் அஷ்ட லஷ்மியின் ஆசீர்வாதங்களை பெற்றிட முடியும்.
 



Leave a Comment