ஆடி அமாவாசை... தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்


ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த  தலங்களுக் கும் சென்று வாருங்கள்.

தீர்த்தம் அதிகமுள்ள திருத்தலம்

ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம்.  இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும்  கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. 

சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இது மட்டுமே.  மொத்த முள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக்காதது போல என்றொரு சொல்வழக்கு  ஒன்றுண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.  

ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணை யிட்ட போது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே  அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து  தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். 

அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப்பெயர் வந்தது. அக்னி நீராடிய  கடலில் நீராடுவோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில்  நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை யன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.

சீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட  பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இங்கு  ஆடிமாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. 

தீர்த்த நீராடலுக்கு  பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம்  நீக்கும் புனிதத்தலமாக  இருப்பதால் ஆடி அமாவாசையும் இங்கு சிறப்பு.



Leave a Comment