ஆடி அமாவாசை.... சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி


சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள்  அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுட்டு ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவு.

காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Comment