சிவஞான யோகம் தரும் ஸ்ரீ மகா வாராஹி மந்திரம்....


துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்


திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.


பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்

மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.


சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே

ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி

எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.


நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று

காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்

பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்

கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.


நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்
 



Leave a Comment