வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்.... வேப்பம்பூ பச்சடி


தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில்  ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது. இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும் என்பதை உணர்த்தும் விதமான வேப்பம்பூ பச்சடி அன்றைய உணர்வில் சேர்க்கப்படுகிறது. 

வேப்பம்பூ பச்சடியை செய்யும் முறை ....
தேவையானவை:
மாங்காய் : 2
வெல்லம் : தேவையான அளவு
வேப்பம்பூ : சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
பச்சைமிளகாய் ; 5

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாற வேண்டும். 



Leave a Comment