சனிபகவான் 4,5,6,7 ஆம் இடங்களில் இருந்தால் நன்மை என்ன? தீமை என்ன?


4-ல் உள்ள சனிபகவான் மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.
 
4-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.
 
4-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.
 
பலம் பொருந்தியவராக உள்ள சனிபகவான் 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.
 
5-ல் சனிபகவான் மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.
 
5-ல் உள்ள சனிபவான் ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.
 
5-ல் உள்ள சனிபகவான் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.
 
 8-ல் உள்ள சனிபகவான் உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.
 
6-ஆம் இடத்தில் சனிபகவானுக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனிபகவானால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.
 
6-ல் உள்ள சனிபகவான் பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.
 
பொதுவாக 6-ஆம் இடம் சனிபகவானுக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.
 
6-ஆம் இடத்தில் உள்ள சனிபகவானால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனிபகவான் பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.
 
7-ல் உள்ள சனிபகவானால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.
 
7-ஆம் இடத்தில் உள்ள சனிபகவான் ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.



Leave a Comment