தைப்பூசம் பூஜை செய்ய உகந்த நேரம் ...!


பூசம் என்றாலே பலருக்கும் தைபூசம் தான் நினைவுக்கு வரும்..அதிலும் தைபூசம் என்றால் முருக பெருமான் தான் முதலில் நினைவுக்கு வருவார். அத்தகையை பூச நட்சத்திரத்தை நம்பெருமான் ஈசரோடு தொடர்புபடுத்தி ஞானசம்பந்தரும்,அப்பர் பிரானும் பாடியருளியதை காண்போம்.

"ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூச நாம் புகுதும் புனலாடவே''  என்று திருநாவுக்கரச பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்.  ''பூசம் புகுந்தாடிப் பொலிந்து அழகாய ஈசன்  உறைகின்ற இடைமருது''  என்றும், ''வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த''  என்றும் #திருஞானசம்பந்த பெருமானும் போற்றி மகிழ்கின்றார்.

மயிலாப்பூரில்  நாகம் தீண்டி மடிந்த பூம்பாவையை, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்து எழுப்பும் போதும் ''நெய்ப்பூசும் ஒண்புழுக்க நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்.

"நெய் நிறைந்த பொங்கல் படைத்துப் பெண்கள் கொண்டாடும் தைப்பூச விழாவினைக் காண வருவாய்...பூம்பாவையே!....'' என்று தைப்பூசத்தினைக் குறித்து பாடியருள்கின்றார். தேவேந்திரன் கடல் நுரை கொண்டு விநாயகர் திருமேனியினை வடிவமைத்து வணங்க -   அதனை அன்புடன் ஏற்றுக் கொண்டு  - விநாயகர் விளங்கும்  திருத்தலமும் ஆகிய - திருவலஞ்சுழியில் - திருஞானசம்பந்தப்பெருமான்  பணிந்து வணங்கும் போது - 


''பூசநீர் பொழியும் புனற்பொன்னியில் பன்மலர் 
வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித் தேசநீர்'' 

''பலவகையான  மலர்களைச் சுமந்து வருவதனால் நறுமணம் மிக்கதாக விளங்கும் பொன்னி எனும் காவிரி நதியில், பூச நன்நாளில் நீராடி - உமது திருவடிகளைப் பணிபவர்களுடைய இடர்களை நீக்கி அருளும் பெருமானே!..'' - என்று சிவபெருமானிடம் விண்ணபிக்கும் பாடல்களை காணலாம்...

இப்படி பெருமை மிகுந்த தைப்பூசம் திருவிழா நாளை (18-1-2022) பெளர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து இருக்கும் நேரம் காலை 5-29 முதல் 5-56 வரை தைப்பூசம் பூஜை செய்ய உகந்த நேரம்.



Leave a Comment