நாளும் கோளும் நம்மை வாட்டாது காக்கும் அனுமன் வழிபாடு.....


புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறும் நிலை மாற்றி நமக்கு வெற்றித்திருமகளின் கருணை பொழியும் பார்வையைப் பெற்றுத்தருவான் ராமதூதன் அனுமான் ...

அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், நிச்சயம் கிடைக்கும். 

யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் பீமனுக்கும் பெரிய பலவான்  வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம். 
 
அனுமனை வணங்கினால் நாளும் கோளும் நம்மை வாட்டாது. 
சோகமும் துரோகமும் நம்மை அண்டாது..
அஞ்சனா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ம சாரிணம்,
துஷ்டக்ரஹ வினாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹம்மஹே

அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். 

முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. 
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன், 
அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ
காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும், தொழுவோம்.
 



Leave a Comment