ஒரே மனையில் 2 வீடுகள் கட்டும்போது முக்கியமாக கவணிக்க வேண்டியது


வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும் செப்டிக்டேங்க் அமைக்க கூடாது. வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க கூடாது. வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.

வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும். வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை வாங்கலாம். வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது. ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.

ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம். ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.

ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது. மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது. வடக்கு வாயு மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.

ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும்,4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.

வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும், முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை செய்தல் மிக நல்லது.

வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை பாதியில் நிறுத்தவேக் கூடாது. முறையான கணக்குகளுடன் செய்யபட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது.



Leave a Comment