சனிக்கிழமை விரதம் இருப்பதின் மகிமைகள்.... 


ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வருகின்றது.  அன்றைய தினத்தில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவிகின்றது. புருஷர்களில் உத்தமமானவன் என்பதால் தான் விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்றழைக்கிறார்கள்.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில், ராமவதாரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. காரணம் ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்தது தான். அந்த ராமாயணத்தை செட்டிநாட்டுப் பகுதிகளில் உள்ள நகரத்தார் வீடுகளில் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். ராமர் பட்டாபிஷேக படம் வைத்து அதன் முன்னிலையில் இன்றும் கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கிறார்கள். இங்ஙனம் ராமாயணம் படிப்பவர்கள் படித்ததைக் கேட்டவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.

பூமகளின் அருகிலிருந்து விஷ்ணுவை நோக்கி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.
 



Leave a Comment