சிவராத்திரி மகாவிரதம் எதனால் கொண்டாடபடுகிறது?


எல்லா கேள்விகளுக்கும்...
ஆன்மீக வழியில் ஒருபதிலும்,
அறிவியல் ரீதியான ஒரு பதிவும் ,
புராண ரீதியாக ஒரு பதிலும் ,
மருத்துவ ரீதியாக ஒரு பதிலும் ,
வாழ்வியல் ரீதியாக ஒரு பதிலும் ,
ஆக எந்த விதத்தில் வேண்டுமோ அந்த வகையில் பதில் கிடைக்கும் .

இந்து மதம் என்பது மதம் இல்லை , அது வாழ்வியல் நெறிமுறை , எப்படி ஒரு மனிதன் வாழவேண்டும் என்று செல்லும் நெறிமுறை பின்னடைய முனிவர்கள் , சித்தர்கள் , ஞானிகள்  மூலம் மக்களுக்கு இறைவனால் சொல்லப்பட்ட விதிமுறைகள். என்பதே நிதர்சனமான உண்மை. சரி இனி ஒவ்வரு ரீதியான பதில்களையும் பார்க்கலாம்.

சிவராத்திரி என்பது விழா அல்ல!  அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம். 
 



Leave a Comment