தை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல அனுமதி 


ஸ்ரீவில்லிபுத்தூரில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம்  கோவிலுக்கு பக்தர்கள் சென்று தரிசிக்க 4 நாட்கள் அனுமதி...

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இக்கோவிலுக்கு 

மாதந்தோறும்  அமாவாசை 4 நாட்கள்,  பௌர்ணமி  4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளனர்.தைஅமாவாசை என்பதால் ஆயிரகணக்காண பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மகோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Leave a Comment