ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.... 


தமிழகத்துக்கு பொங்கல் பண்டிகையைப் போல கேரளாவில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது ஓணம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் திருவோணம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 31-ந் தேதி திருவோண தின சிறப்பு வழிபாடு, 1-ந் தேதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை, 2-ந் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 21-ந் தேதி வரை புரட்டாசி மாத பூஜை நடைபெறும்.

கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, புரட்டாசி மாத பூஜைக்காக 16ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
 



Leave a Comment