பிரதோஷம் தோன்றியது எப்படி?


சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.

பிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.

பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்.
 



Leave a Comment