மகளிர் ஸ்பெஷல் ஆன்மீகக் குறிப்புகள்


உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆன்மிகத்தினை பற்றி தெரிந்து கொள்வது நல்ல பழக்கம் ஆகும். ஆன்மீகம் மனதினை அமைதிப்படுத்தவும், இறை சிந்தனையை அதிகமாக்கவும் உதவுகிறது. இறைவனை பூஜிப்பதால் நன்மைகள் கோடி. ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆன்மீக தகவல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
மஞ்சள் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.
திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். அப்படி அணியாமல் மூன்று விரலில் மெட்டி அணிந்தால் கணவருக்கு ஆபத்து ஏற்படும்.
உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு கர்ப்பிணி பெண்கள் போகக்கூடாது.
பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும், வகிட்டிலும் இட்டுக்கொள்ள வேண்டும்.
அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.
கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக்கூடாது.
ஆன்மீகத்தின் உண்மையை புரிந்து கொண்டு இறைவழிப்பாட்டை செய்தால் நற்பலன்கள் கிடைக்கக் கூடும்.



Leave a Comment