பெண்கள் மஞ்சள் பூச வேண்டியது அவசியமா?


கந்தகச் சத்து மிகுந்த மஞ்சளை ஒரு பெண் பூசுவதால் தன் கணவனை அன்யோன்யப்படுத்திட முடியும். நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞா சக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. 

கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில்  வைத்துக் கொள்வதாலும்,தீயசக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.மஞ்சளில் விரளி,கஸ்தூரி,காஞ்சிரை என்ற மூன்று வகை உண்டு. காஞ்சிரை மஞ்சளை  மனநிலை சரியில்லாதோர் துர்சக்தி பாதிப்படைந்தோர் பயன்படுத்த, பூரண குணம் அடையலாம். 

மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த  கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது  அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. 

கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள்  வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. லலிதா பரமேஸ்வரிக்கு ‘ஹரித்ரான்னைக ரஸிகா’ என்ற பெயர் உண்டு.மஞ்சள் சாதத்தை அதிகம் விரும்புபவள் என்ற பொருள். பெண்கள் ஹரித்ரா பயன்படுத்தினால் தரித்திரம் போய்விடும்.
 



Leave a Comment