திருவிடைமருதூர் 5 தேரோட்டம்....


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற 5 தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம். இவ் ஆலயத்தில் நடைபெறும் முக்கிய திரு விழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. விநாயகர், சுப்பிரமணியர் ,சண்டிகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் மகாலிங்கசுவாமி ஆகிய ஐம்பெரும் தெய்வங்களும் தனித்தனி தேரில் எழுந்தருளினர். 

தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர் . தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . நாளை தைப்பூசத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 



Leave a Comment