திருப்பதியில் வி.ஐ.பி வரிசையில் தரிசனம் செய்ய வேண்டுமா....! இதோ எளிய வழி....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரி கடிதமும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் கட்டுவதற்கும், கோவிலை பாதுகாக்கவும் , புனரமைக்க , தூப தீப நைவேத்தியம் செய்வதற்கு, அர்ச்சகர்களின் நிதி உதவி வழங்குவதற்கும், இந்து தர்ம பிரச்சாரத்திற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமென்றாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூபாய் 10,000 முதல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி விஐபி தரிசனத்திற்கான 500 ரூபாய் டிக்கெட் கொடுத்து பக்தர்கள் பெற்று தினந்தோறும் காலையில் நடைபெறக்கூடிய விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். 

இது போன்று ஒரு பக்தர்கள் 10,000 முதல் 99 ஆயிரம்  ரூபாய் வரை நன்கொடை வழங்கி ஒன்பது டிக்கெட்டுகள்  வரை பெறலாம் ஒரு லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 லட்சத்திற்கும் மேல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏற்கனவே உள்ள அறக்கட்டளைக்கு  நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உள்ள முன்னுரிமை தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியுள்ளார்.

ஒரு லட்ச ரூபாய்க்கு உட்பட்டு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் இல்லாத நிலையில் தற்போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் நேரடியாக திருமலையில் வந்து பத்தாயிரம்  ரூபாய் நன்கொடை டெபிட் கார்டு மூலமாகவும், பணமாகவும் செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். விரைவில் ஆன்லைன் மூலமாகவும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தி வி.ஐ.பி. டிக்கெட் பெறும் விதமாக செய்யப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.



Leave a Comment