திருத்தணி முருகபெருமான் தேரோட்டம்.... வீடியோ காட்சி 


திருத்தணி முருகன் கோயிலில்  மாசி பிரம்மோற்சவம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மரத்தேரோட்டம். மேள தாளங்கள் முழங்க, முருகன் பஜனை குழுவினர்  பக்தி பாடல்கள் இசையுடன், முருகப்பெருமான் மலைக் கோயில் மாட வீதிகளில் உலா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில் மாசிமாத பிரம்மோற்சவம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. உற்சவ விழாவில் தினம் தோறும் உற்சவர்  சிறப்பு அலங்காரத்தில் வாகன சேவைகளில் எழுந்தருளி  மலைக் கோயில் மாட வீதிகளில் உலா நடைபெற்று வருகின்றது. 

உற்சவ விழாவில் 7ஆம் நாளில் மாலை சிறப்பு பெற்ற மரத்தேரோட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயில் தேர்  பழுதடைந்ததை தொடர்ந்து நிறுத்தப்பட்ட தேர் புதுபிக்க வேண்டும் என்று  முருக பக்தர்கள் கோரிக்கை  இந்து அறநிலைத்துறை  கண்டுக்கொள்ளாத நிலையில் திருத்தணி  முருகன்  திருவடி திருச்சபை சார்பில்  ரூ.50 லட்சம்  மதிப்பீட்டில்  33 அடி உயரமுள்ள மரத்தேர் புதியதாக உருவாக்கப்பட்டு திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனை அடுத்து இன்று  மாலை நடைபெற்ற தேர் திருவிழாவை யொட்டி  மரத்தேர்   மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத உற்சவர் சுப்பிரமணியர்  சிறப்பு  அலங்காரத்தில் மரத்தேரில்  அமர்ந்தனர். கோயில் அர்ச்சர்கள் சிறப்பு பூஜைகள் தீபாராதனை தொடர்ந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தேர் பவனி நடைபெற்றது. மலைக் கோயில் சுற்றி  தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோரக என்று பயபக்தியுடன் வழிபட்டனர். 

தேர் மாட வீதிகளில்  உலா சென்ற போது முருகன் பக்தி குழுக்கள் திருமுருகன் பாடல்கள் இசைத்தவாறும், கெண்டை மேளம், நாதஸ்வரம், பஜனைகள்  மலைக்கோயிலில்  கோலாகலத்தை ஏற்ப்படுத்தியது. தேரோட்டத்தில் திருத்தணி கோ.அரி எம்.பி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.



Leave a Comment