இன்று தை மாத ஏகாதசி....


ஏகாதசி ..... மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க ஏற்படுத்தி இருக்கும் வழி தான் ஏகாதசி. ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு அற்புதமான தினமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

 அதாவது அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில்  ஆண்டு முழுவதும் ஏகாதசி வரும். இப்படி வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. 
அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது. அப்படி இருக்க இன்று தை மாத தேய்பிறை ஏகாதசி... 
தை தேய்பிறை ஏகாதசி ஸபலா எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

அதேபோல தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரா என்று அழைக்கப்படும் . இந்தநாளில் கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.



Leave a Comment