அம்மை நோய் போக்கும் சமயபுரத்தாள்


அருள்மிகு சமயபுர மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அன்னை வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும் மற்றக் கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருள்கடாட்சம் அளிக்கின்றாள்.

அம்மை நோயினால் பாதிக்கப் பெற்றவர்கள் இத்தலத்து அன்னையை வேண்டிக் கொண்டால், உடனடியாக நோய் நீங்கப் பெறுவர். இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாள்கள் தங்கி கோவில் ஊழியம் செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றலாம்.

உடல் உறுப்புக் குறைபாடுள்ளவர்கள் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் இத்தலத்தில் வணங்கி வேண்டினால் விரைவில் நலம் பெறுவர். வியாபார வளர்ச்சி, வேளாண்மைச் செழிப்பு ஆகியவற்றிற்காகவும் இத்தலத்திற்குப் பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர்.

இத்தலத்தில் காணிக்கை, அர்ச்சனை, அபிஷேகம், காதுகுத்தல், தங்கரதம் இழுத்தம், அலகு குத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கரும்புத் தொட்டில், மாவிளக்கு எடுத்தல், நெல் காணிக்கை, ஆடு, மாடு, கோழி, தானியங்கள் செலுத்துதல் அன்னதானம் ஆகினவாகும்.

உற்வச அம்பாளுக்குத் தினமும் ஆறு கால பூஜை அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அபிஷேக தீர்த்தம் வடக்குத் திருச்சுற்றில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.
 



Leave a Comment