வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக! நாம் செய்ய வேண்டியது....



உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி. என அனைத்தையும் வழங்குபவள் அவள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி என இந்த எட்டு நிலைகளிலும் அருளும் அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நமக்கு கிட்டும்.

 

எனவே வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

கல்கண்டு

  

இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். 

மஞ்சள்... குங்குமம்

  

 

மஞ்சள், குங்குமம்  மிகவும் மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்தாகவும் கருத்தப்படுகிறது.

உப்பு

  

பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.

தாமரை

 

வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி  வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.

இது தவிர இல்லத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு,  உள்ளத் தூய்மையுடன் காலை, மாலை ஆகிய நேரங்களில் வீட்டில்  விளக்கேற்றி வழிபட்டால் பூரண லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.



Leave a Comment