களத்திர தோஷம்.... பாதிப்பு யாருக்கு?


ஒருவரின் ஜாகத்தில் 7ம் வீடு பாதிப்படைந்தால் களத்திர தோஷம் ஏற்படுகிறது. இந்த அமைப்பை பெற்ற ஜாதகங்களில் 2ம் வீடும் சேர்ந்து பாதிப்படைந்தால் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதனால், திருமண வாழ்க்கை அமையாமல் ஜாதகர் சிரமப்படுவர். இந்த அமைப்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளமல் இருப்பது சிறந்தது.

இல்லையெனில் களத்திர தோஷம் உள்ள ஆண்கள் (அதாவது 2 மற்றும் 7ம் பாவங்கள் பாதிப்படைந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களை) திருமணம் செய்து கொண்டால் களத்திர தோஷம் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

சுக்கிரன் களத்திரபாவாதிபதி ஆவார். அவர் சர்ப்ப கிரகங்களான ராகுவுடனோ, கேதுவுடனோ சேர்ந்திருந்தாலும், கன்னியில் நீச்சம் அடைந்திருந்தாலும், லக்னாதிபதிகள் ராகு, கேதுவுடன் இருப்பினும், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் சர்ப்ப கிரகங்கள் இருப்பினும், நீச்சம் பெற்ற ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் இணைந்திருந்தாலும், ஏழாம் அதிபதி நீச்சம் அடைந்திருந்தாலும், நீச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்து இருந்தாலும் களத்திர பாவம் பலம் இன்றி திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

தோஷமில்லாத ஜாதகத்திலும் சனி – சந்திரன் கூட்டு ஏற்படும் போது தடையை ஏற்படுத்தி துன்பத்தை தருகிறது.

இதனால், எந்த காரியத்தை துவங்கினாலும் தடை ஏற்படும். திருமண ஏற்பாடு முழுவதும் திடீரென்று நின்று விடுதல் அல்லது தள்ளிப்போதல், மணமகன், மணமகளை மாற்றும்படி அமைதல் போன்ற சிக்கல்கள் தோன்றும்.



Leave a Comment