திருப்பதியில் சிலிர்க்க வைக்கும் சிலா தோரணம்


சிலா தோரணம். யாரோ செதுக்கியதல்ல இது; இயற்கையாகவே அமைந்தது. உலகிலேயே மூன்று இடங்களில் தான் இந்த அமைப்பு இருக்கிறதாம். ஒன்று அமெரிக்காவில் உள்ள கூடா வானவில். அடுத்தது, இங்கிலாந்தில் இருக்கும் பால்ட்ரேடியம் படிகப் பாறைகள். மூன்றாவது நம் திருப்பதியில் இருக்கிறது.

வேங்கடவன் ஆட்சி செய்யும் திருமலையில் ஒரு பாறைப்பகுதியில் அமைந்திருக்கிறது இந்த சிலா தோரணம். இது உருவாகி சுமார் 150 கோடி வருடங்களாவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த சிலா தோரண அமைப்புள்ள இடத்திற்கு சற்று தொலைவில் இருந்த புற்றில் இருந்துதான் வேங்கடவன் வெளிப்பட்டாராம். எனவே இது திருமலைவாசனின் அவதார இடமாகவும் கருதப்படுகிறது.

திருமலையானின் சந்நதிக்குப் பின்புறம் சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த சிலா தோரணத்தை அருங்காட்சிப் பொருளாகப் பாதுகாத்து வைத்துள்ளனர். திருமலையான் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அடுத்த முறை திருப்பதி செல்லும்போது இந்த சிலாதோரணத்தையும் கண்டு வாருங்களேன்.



Leave a Comment