திருப்பதியில் 8 வகையான தரிசனங்கள் ரத்து!


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் மூத்த குடிமக்கள் உள்பட 8 வகையான தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது திருப்பதியில் வரும் செப்டம்பர் 12 முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது.

அந்த நாட்களில் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள். இதனால் பிரம்மோற்சவ விழா நாட்களில் தேவஸ்தானம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், பரிந்துரை கடிதங்களுக்கு அளிக்கப்படும் தரிசனங்கள், நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனங்கள், ராணுவ வீரர்கள், என்.ஆர்.ஐ. வாசிகள் மற்றும் ஆர்ஜித சேவை தரிசனங்கள் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளது.ஆதலால் இதனை கருத்தில் கெண்டு பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் 67,890 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 26,289 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று வைகுண்டத்தில் உள்ள 31 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத் திருந்தனர். அவர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேர ஒதுக்கீடு முறை பக்தர்களும் நடைபாதை மார்க்கத்தில் வந்த பக்தர்களும் 4 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment