திருப்பதி அங்குரார்ப்பண நிகழ்ச்சி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மகாசம்ப்ரோசணம் எனப்படும் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தயார் நிலையில் உள்ளது. மேலும் கும்பாபிஷேகத்தின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி முதல் நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment